சிறிலங்காவில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்பட்டு வந்த விசேட அரச விடுமுறை ரத்து செய்யப்படும் திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் எட்டாம் திகதி முதல் விசேட அரச விடுமுறை ரத்து செய்யப்படும்.குறித்த விடயத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவைத் துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.