தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் அன்னை பூபதி அவர்களின் நினைவைத் தாங்கிய கவிதைப்போட்டி 05.04.2026 ஞாயிறு அன்று இணையவழியூடாக நடாத்தப்பட்டது.
எட்டுப் பிரிவுகளாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் 56 போட்டியாளர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தனர். அனைவரும் ஆர்வமும் இனப்பற்றும் மேலோங்க உணர்வெழுச்சியோடு கவிபாடியிருந்தமை பாராட்டுதற்குரியது. இவ்வாண்டு கூடுதலான இளையவர்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தமை நம்பிக்கை ஊட்டியது.
தமிழின உணர்வையும் வரலாற்றையும் கடத்துவதோடு தன்னம்பிக்கையும் ஆளுமையும் கொண்டவர்களாக வாழ்வதற்கும் இதுபோன்ற போட்டிகளும் துணைபுரிகின்றமை சிறப்பானது. போட்டியாளர்களை ஊக்கிவித்து வழிகாட்டிய அனைவருக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
போட்டியில் பங்குபற்றியவர்களில் முதல் மூன்று நிலைகளில் தெரிவானோர்கள் விபரம் வருமாறு..















