மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்ஸ{க்குத்’ தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி கட்டளையிட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.
ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.
மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
