ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் சிக்கலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு வீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் $92.76 ஆகவும் WTI $86.53 ஆகவும் அதிகரித்துள்ளது. யுரேனிய விவகாரத்தில் ஈரானின் பிடிவாதமும் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் அச்சுறுத்தலும் விநியோகத் தட்டுப்பாடு பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
