நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று ஒரு சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதல்களை நடத்தியதாகவும் அது முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க விமானப்படையின் ஆறு F35 மற்றும் F16 ரகப் போர் விமானங்கள், ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் கெஷ்ம் தீவுப் பகுதிகளில் 90 நிமிடத் தாக்குதல்களில் நான்கு ஈரானியத் தளங்களைத் தாக்கியதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகள்
