தமிழின் அடையாளம் தொல்காப்பியத்திற்கும் மலையாளத்தின் அடையாளம் சண்டைமேளத்திற்கும் என்ன தொடர்பு? உலகத் தொல்காப்பிய மகாநாட்டில் சண்டைமேளத்தை இணைந்த தொல்காப்பிய தமிழ் பற்றாளர் யார்? வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ் என் உயிர்.தமிழ் என் உயிரென்றால் தொல்காப்பியமும் என் உயிரே.
நீண்டநெடிய வரலாற்றுத் தமிழுக்கு தமிழ்த் தேசியப் பேரினத்தின் அடையாளம் தொல்காப்பியம்.
கனடாவில் தொல்காப்பியம் பற்றி இளையவர்களுக்கு கல்வியூட்டி வரும் தொல்காப்பிய மன்றத்தினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தொடக்க நிகழ்வில் தமிழரின் தொன்மை இசைக்கருவிகளோடு தமிழின் தொல்காப்பியத்திற்கும் தமிழ்ப்பேரினத்திற்கும் தொடர்பற்ற கேரள பண்பாட்டின் இசையாக ஒலிக்கும் சண்டைமேளத்தை இணைத்தது மிக மிக துயர் நிறைந்த மாநாடாக பார்க்க முடிகிறது.
பல கல்வியாளர்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தபோதும் எவரும் சண்டைமேளத்தை விலக்கி தமிழ் இசைக்கருவிகளோடு விழாவை தொடங்கும்படி கேட்காமல் அமைதியாக இருந்தது மிகமிக துயராகும்.
இவ்விழாவில் பங்குபற்றியோர் திராவிட,ஆரிய சனாதன அடிமையுணர்வோடு கலந்து கொண்டதால் தமிழின உணர்வும் பற்றும் செத்துவிட்டது.
திராவிட பற்றாளர்கள் ஆரியப்பற்றாளர்கள் கேரள பண்பாட்டு இசையோடு இன்று 2026 செப்ரம்பர் 15 ஆம் நாள் காரிக்கிழமை (19.09.2026)கனடாவில் 2ஆவது உலகத் தொல்காப்பிய மாநாடு கனடாவில் தொடங்கியது.
திராவிடப்பற்றாளர் என்பது திராவிடத்தை அணைத்துக்கொண்டவர்கள். திராவிடத்திற்கு தமது எழுத்துக்களால் கனடாவில் உயிர் ஊட்டியவர்கள். தம்மை தமிழர்கள் என்று அழைப்பதை விட திராவிடர் என அழைப்பதில் மகிழ்ச்சி கொள்பவர்கள்.
திராவிடம் என்ற சொல்லின் பொருள் சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்களை சூத்திரப்பட்டம் சூட்டிய பிராமணர்கள் தென் தமிழகத்தில் வாழும் பிராமணர்களை திராவிடர்கள் என தம்மை அடையாளப்படுத்தி தம்மை திராவிடம் என்ற அடைமொழி இட்டு அழைப்பார்கள்.
திராவிடம் என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல.தமிழர்களின் வரலாற்றில் இல்லாத சொல்.
தமிழ்நாட்டில் ஈ.வே.ராமசாமி என்ற கன்னடர் தமிழ்நாட்டில் தமிழை காட்டுமிராண்டி மொழி என இழிவுபடுத்தி தமிழர்களை திராவிடர் என இனம் மாற்றியவர். தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியாளர்கள் தமிழர்களை அடிமையாக்கி தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றப் பயன்படுத்திய சொல்லே திராவிடம் ஆகும்.
திராவிடம் என்பது இனமோ.மொழியோ இல்லை.தமிழர் அல்லாதவர்களால் தமிழ்நாட்டில் தமிழர்களை அடிமைகளாக்க ஏதிலிகளாக்க வறுமையில் வாழ தமிழ்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிட்டு திணிக்கப்பட்ட சொல் திராவிடம் ஆகும்.
கனடாவிற்கு தமிழீழ மண்ணில் இருந்து இடம்பெயர்ந்த கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் முனைவர்கள் தமிழ் ஆசிரியர்கள் திராவிட மாயையில் மூழ்கியதால், தம்மை தமிழர்கள் என்று சொல்ல தயங்குகிறார்கள்.
இவர்கள் தமது நூல்களில் திராவிடச் சொல்லைப் பயன்படுத்தி திராவிட அரசியலுக்கு துணைநிற்கிறார்கள்.
ஆரியப்பற்றாளர்கள் என்போர்
தமிழர்களின் கோயில்களில் பிராமணர்களால் சமசுகிருத மொழியில் வழிபாடு செய்ய துணைநிற்பவர்கள்.விளங்காதமொழியில் அர்ச்சனை செய்வதற்கு தமது பணத்தை கொடுப்போர்.பிராமணர்களின் சூத்திரப்பட்டத்தை தமதாக்கியவர்கள்.
தமிழர்களின் பணத்தில் காணிகளை வாங்கி தமிழர்களின் பணத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தமிழ்க்கடவுள்களுக்கு தமிழ்மொழியில் வழிபாடு நடத்துவதற்கு தொல்காப்பிய மன்றம் முயற்சி எடுக்காததேன்?
தமிழர்களின் பணத்தில் காணிகளை வாங்கி தமிழர்களின் பணத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தமிழ்க்கடவுள்களுக்கு தமிழர்கள் பூசகர்களாக பங்கேற்று வழிபாடு நடத்துவதற்கு தொல்காப்பிய மன்றம் முயற்சி எடுக்காததேன்?
தமிழர்களின் இறைவழிபாட்டில் தமிழர்களை புறந்தள்ளி பிராமணர்களின் உள்நுழைவும் தமிழ்க்கடவுளுக்கு தமிழ்மொழி வழிபாட்டை புறந்தள்ளி சமசுகிருத மொழி புகுத்தப்பட்டபோது தமிழர்கள் தட்டிக் கேட்கத்தவறியதன் விளைவு தமிழ்மொழி அழிப்பு தமிழர்களின் கோயில்களின் பிராமணர்களால் முன்னெடுக்கப்படுகிறது.
கேரளமண்ணில் தமிழர்கள் மீது மலையாளிகள் தாக்குவதும் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கமறுப்பதும், தமிழ்நாட்டு வளத்தில் கேரளாவில் கட்டுமானப்பணிகள் முன்னெடுப்பதும் , கேரளக்கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டியும் கேரள மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு கேடு விளைவிப்பவர்கள்.தன்மானம் நிறைந்த தமிழர்கள் எந்தக்காலத்திலும் செண்டை மேளத்தை தமிழர்களின் விழாக்களில் பயன்படுத்தமாட்டார்கள்பயன்படுத்தக்கூடாது.
தொல்காப்பிய விழாவில் சண்டைமேளத்தை அடித்தது மிக மிக தவறானது.தமிழுக்கு இழுக்காகும்.தமிழர்களுக்கு சிறந்ததல்ல.தொல்காப்பியத்தின் சிறப்பை சீரழித்திருக்கிறது.தொல்காப்பியத்தின் பெருமையை அவமானப்படுத்தியிருக்கிறது.
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.கற்றவர்கள் தமிழராக தலைநிமிராதவரை தமிழை தமிழரை அவமானப்படுத்துவார்கள்.
தமிழர்களே தவறுகளைத் தட்டிக்கேளுங்கள்
