முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு பிணை கிடைத்தாலும் விளக்கமறியல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு கொடுக்கல் வாங்கல் வழக்கொன்றில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆயினும், அவர் மீதான பிற வழக்குகள் காரணமாக அவர் தொடர்ந்து விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை, ட்ரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்தில் உள்ள காணியை பல்நோக்கு திட்டத்திற்காக தனியார்; நிறுவனத்திற்கு வழங்குவதற்கு உதவியதாகக் கூறி, இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். வழக்கை விசாரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியதுடன் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தது. எனினும், அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள வேறு வழக்களின் கீழ் தொடர்ந்து சிறையிலடைத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச மீதான ஊழல் வழக்கு ஆரம்பத்தில் 70 மில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு, பின்னர் 100 மில்லியன் ரூபா நிதி முறைகேடு என்ற அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
