ஓடுபாதைகளில் ஒன்றிற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஜெர்மன் விமான நிலையம் பல மணிநேரம் செயலிழந்தது.
2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்தியதிலிருந்து, ஜெர்மனி மற்றும் பிற நேட்டோ நட்பு நாடுகளின் முக்கிய இடங்களுக்கு மேல் பல ஆண்டுகளாக ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிகுண்டு ட்ரோன் செயலிழக்கப்பட்டது.
லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில் நேற்றிரவு நடந்த பாதுகாப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, வெடிகுண்டுடன் சென்ற ஆளில்லா விமானம்ஒன்றை ஜெர்மன் கூட்டாட்சி காவல்துறை நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இதுவரை அடையாளம் காணப்படாத வெடிகுண்டிலிருந்து வெடிதூண்டி அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு ஜெர்மனியில் உள்ள இந்த விமான நிலையம் , நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக விளங்குவதால், இதற்கு அரசியல் நோக்கம் இருக்கலாம் என்பதையும் தாங்கள் நிராகரிக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர் .
வெடிகுண்டை ஏற்றிச் சென்ற ட்ரோன், புதன்கிழமை இரவு தெற்கு ஓடுபாதையில் விமான நிலைய ஊழியர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப எச்சரிக்கைக்குப் பிறகு தரையிறங்குவதைக் கைவிட்டு, காற்றில் பறந்துகொண்டிருந்த ஒரு சரக்கு விமானத்தின் மீது, பின்னர் மற்றொரு பறக்கும் பொருள் மோதியதாகத் தெரிகிறது.
