வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (26) புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
