சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசா அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விடுவிப்பிற்கு தலையிட்டு நடவடிக்கை எடுத்தமைக்காக, அவரது குடும்பத்தினர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி மற்றும் நிற வேறுபாடுகளைக் கடந்து விவகாரத்தில் தலையிட்ட அனைவருக்கும் விசேட நன்றிகள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனோஜன் சிவராசா தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது பெற்றோர்; தெரிவித்துள்ளனர்.
மகனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்கு ஆரம்பம் முதலே தலையிட்ட ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அனோஜனின் தாயார் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
