முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அரச ஆதரவு சக்தி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்றைய தினம் (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகள் நிறைவடைந்து அவர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பிரதான வாயிலுக்கு அருகாமையில் முன்னாள் ஜனாதிபதி வெளியேறிய வேளையில், ஒளிப்பதிவாளர் தனது கமராவினால் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
Geographic Reference
தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி, மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
