கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு எதிரான வழக்குகள் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரது சிறைச்சாலை வாழ்வு தொடர்கையில் மஹிந்த ராஜபக்ஸவும் ஏற்கனவே திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் யோசித ராஜபக்ஸ ஆகிய மூவருக்கு எதிரான வழக்குகளே கொழும்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிpராந்தி ராஜபக்ஸ ‘சிறுவர் வைத்தியசாலை நிதி மோசடி தொடர்பாகவும் நாமல் ராபக்ஸ மற்றும் யோசித ராஜபக்ஸ ஆகியோர் நிதி முறைகேடு மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான வெவ்வேறு வழக்குகளுக்காகவும் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவுக்கு மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்பில் மேலதிக மருத்துவ அறிக்கைகள் வெளிவர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே சிராந்தி ராஜபக்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்த இதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எனினும், அவர் உண்மையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக வைத்தியசாலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
