ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கும் நாடுகள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி எச்சரித்துள்ளார். இந்தநிலையில் கடற்படை அல்லது தளவாட உதவிகளை வழங்குவது சட்டவிரோத பகைமை நடவடிக்கையாகவே கருதப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
