ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, அந்நாட்டின் சிவில் அணுசக்தி திட்டத்துக்காக யுரேனியம் விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்ததாக மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் அமெரிக்கா கொண்டுள்ள உடன்பாட்டை ஒத்த வகையில், ஈரானும் அமைதியான அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க முடியும் எனவும் அமெரிக்கா முன்மொழிந்ததாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
