உக்ரைனில் மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய எரிசக்திக் கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு போர் ஆரம்பமானதிலிருந்து உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
