வவுனியா, கனகராயன்குளம் பகுதி ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் பலமாக மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்புப் படையினரால் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
