மாத்தளை காவல் நிலையத்தில் உள்ள ஒரு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்,கடந்த 20ஆம் திகதி அதிகாலைவேளை உடல்நலம் குன்றி, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனையில், அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாட்டே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
