இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இன்று (நவம்பர் 24) கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை காவல்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கும், காவல்துறையின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது. காவல்துறை தலைமையகத்தில், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் மற்றும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
