அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒருபோதும் கொலை செய்ய ஈரான் முயற்சிக்காது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். ட்ரம்பை கொலை செய்ய ஈரான் அரசு சதி செய்ததாக அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க அதிகாரிகளும் முன்னதாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பெசெஷ்கியானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
