தனது தனிப்பட்ட கோரிக்கையொன்றை முன்வைத்து, திரப்பனை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு சமிக்ஞைக் கோபுரத்தில் ஏறி நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், குறித்த நபர் தொடர்ந்து கோபுரத்தின் மீது தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
