அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு உள்ளூர் நாடு அரிசியை விற்பனை செய்த கம்பளையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையான 230 ரூபாய்க்கு பதிலாக, ஒரு கிலோ நாடு அரிசியை 240 ரூபாய்க்கு அந்த அங்காடி விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த பல்பொருள் அங்காடி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தது.
