நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் அதிகாரிகள் 7 பேர் உள்ளடங்கலாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த கைதிகள் பலருக்கு அறுவை சிகிச்சை மேற்ககாள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
தனது கட்டுப்பாட்டில் உள்ள திணைக்களத்தில் மோதல் இடம்பெற்றுள்ளமையினால் அதற்கான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான மோதல் மற்றும் ஆயுதக் கிடங்கைக் கொள்ளையடிக்கும் முயற்சி என்று அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கூறுகின்றன.
இதனிடையே 2012-ல் வெலிக்கடையில் நடந்த கலவரத்தின் போது, கோத்தபாய ராஜபக்சவின் சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவர்கள், நாட்டை உலுக்கிய அரசியல் பேரங்கள் தொடர்பான பல முக்கிய சாட்சிகளை பெயர் குறிப்பிட்டு பேசிய நிலையில் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பின்னர் தெரியவந்தது.
Politics
இந்நிலையில் தற்போது இறந்த மற்றும் படுகாயமடைந்த கைதிகளில், வரவிருக்கும் முக்கிய போதைப்பொருள் வழக்குகள் மற்றும் அரசியல் தொடர்புகள் கொண்ட பாதாள உலக வழக்குகளின் முக்கிய சாட்சிகளும் உள்ளார்களாவென்ற கேள்வி எழுந்துள்ளது.
