மேகம் திரண்டு வானம்
அழுதால் அது மழை!
சோகம் திரண்டு கண்கள்
அழுதால் அது கண்ணீர்!
வான் மழையும், கண் மழையும்
நீடித்து நிலைத்திருப்பதில்லை… சில நிமிடங்களில்
இரண்டுமே ஓய்ந்துவிடும்
மனமே சமாதானம் கொள் ..
மழை நீர் உலகத்தை காக்கும்
கண்ணீர் உள்ளத்தை காட்டும்
வானம் தெளிந்தது போல் -உன்
மனமும் அமைதி கொள்ளும் !
ஆக்கம் செல்வசிறி
