மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் சம்பூர் பிரதான வீதியில் இன்று (06) வியாழக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் மோட்டார் சைக்கிள் சாரதியும் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
