எங்கும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்திட, மணி ஓசையும்,மந்திர ஒலிகளும்,மங்கல வாத்தியமும் முழக்க,ஜேர்மனியின் யூச்சன் நகரின் ஆன்மீகப் பெருமையாய் விளங்கும் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் திருக்கல்யாணப் பெருவிழா மிகவும் கோலாகலமாகவும் பக்திப் பரவசத்துடனும் நிறைவேறியது.
