லெபனானில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்ததாகக் கருதப்படும், இலங்கையர் என்று நம்பப்படும் ஒரு பெண்ணின் அடையாளம் குறித்துத் தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அந்தப் பெண் “ராணி சிறி லங்கி” (Rani Sri Lanki) என்ற பெயரில் அறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
