ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடியில் சிக்கி சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதிலிருந்த கொள்கலன்களில் இருந்து ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் காணொளி வைரலாகி வருகிறது.
