இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் ஆகியோருக்கிடையிலான பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று (03) புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது, இந்தியா மற்றும் பெல்ஜியம் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகள் குறித்தும் இரு பிரதமர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தையின்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
