தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்த வீட்டின் மீது அமெரிக்காவின் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
