இசை பிரியன் ஸ்டுடியோ இசையின் இயக்கம்…
தேசக்காற்று
பிரிகேடியர் தீபன் களமுனைகளின் செருக்கள நாயகன்
இந்த ஒலிப்பேழையிலுள்ள வெறுமேனை இசைபாடல்க்களல்ல; இவை இந்த தளபதிகளுக்காக தீர்க்கப்படும் மரியாதை வேட்டுகள்.
எண்ணமும் செயற்பாக்கமும் : திருமதி தீபன் இலக்கியன் உருவாக்கம், வெளியீடு : தேசக்காற்று ஆவணகம்
எங்கள் பாசத்துக்குரிய தமிழீழ சொந்தங்களே! வணக்கம்.
இசைவளி உங்கள் இதயங்களைத் தொடும் முயற்சியில் வரலாற்றைச் சொல்லும் “பிரிகேடியர் தீபன் களமுனைகளின் செருக்கள நாயகன்” இசைப்பாடல்கள் என்ற வடிவத்தில் உங்கள் வாசல் வருகிறோம். செவிகளில் நுழைந்து, இதயத்தில் விழுந்து, உங்கள் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவும் இந்த பாடல்களின் அதிர்வலைகள்.
உள்ளுக்குள் இயக்கமும் வீரமுமாய் கிளர்ந்தெழும் உணர்வுகளை உருவாக்கும் உன்னத பாடல்களைக் கொண்ட இசைப்பேழை இது. ஒரு கொடியில் மலர்ந்து, ஒரே முற்றத்தில் தவழ்ந்து, நடைபயின்று, அதே மண்ணை அள்ளி அலைந்து விளையாடிய எங்கள் பிள்ளைகள் புலிகளான கதையைச் சொல்கின்றன. ஒரே குகையிலிருந்து புறப்பட்டு களமாடிய புலிகளைப் பாடுகிறது.
உண்மையும் இன உணர்வும் உயர்குணங்களாக வாழ்ந்த இருபெரும் தளபதிகளின் வாழ்வின் வரலாற்றைச் சொல்லி நிற்கின்றன பாடல்கள்.
லெப்டினன்ட் சோல்ஸ் அன்ரனி, சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல் கில்மன் அல்லது காந்தன், வட போர்முனையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் இவர்கள் தாயின் வயிற்றிலும் தாய் மண்ணின் களத்திலும் சம இடத்தில் சங்கமித்தவர்கள். அவர்கள் ஆளுமை, ஆற்றல் பற்றிய பாடல்களூள்ளே பிரதியிடப்பட்டிருக்கின்றது.
தேசிக் குரு படை நடவடிக்கையை திக்குமுக்காட வைத்ததிலும் எங்கள் இனத்தின் கழுத்தை நெரித்த ஆணயிறவுப் படைத்தளத்தை மீட்கும் சமரிலும் தாய் நிலத்தின் இதயத்தில் கத்திக் கொதித்த யாள் தேவி மறிப்பிலும் தமிழீழத் தாயவளின் உடலை நீராக்க வந்த தீச்சுவாலைச் சுட்டெரிப் போன்றாலும் புலிகளின் போரிடும் மாற்றலுக்குப் புகழ்ச்சமாலையாய் இருந்த முகமாலை என்றாலும் அங்கெல்லாம் தனது ஆற்றலால் இனம் காத்தவர் தளபதி பிரிகேடியர் தீபன்.
அவரின் சகோதரன் கில்மன் போராட்டப் பதித்த தடங்களும் அழியாதவை. புதிய போராளிகளைச் செனரக ஆயுதங்கள் இயக்கும் திறனாளிகளாக உருவாக்கும் பணியிலும், வேறுவு நடவடிக்கைகள் பலவற்றிலும் திறம்படச் செயலாற்றியதிலும் பின்னர் தலைநகர் திருமலையை மீட்கும் முயற்சியில் எதிரிகளைத் தேடித் தாக்கியும், தடுத்து நிறுத்தியும், சமர்க்களத்தின் புதிய சரித்திரத்தை எழுதியதிலும் தளபதி லெப்டினன்ட் கேணல் கில்மன் பரணி பாடத்தக்க பாட்டுடைத் தலைவன் ஆகிறார்.
இந்த இரண்டு வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையே வரிவடிவங்களுக்குள் கவிதையாக இசைக்கோலங்களில் கலவையாகக் குரல்களில் உயிர் பெற்று வருகின்றன.
தக்க தருணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு பக்கபலமாய் இருந்தவர்கள். தேசம் தவித்த நேரத்தில் தேசியத் தலைவரின் கரங்களை பலப்படுத்தியவர்கள். வெறுமனே வார்த்தைகளால் வடித்துவிட முடியாதுதான். இருந்தாலும் வாழும் சாட்சிகள் இருக்கும் போதே வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சி இது.
இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் தளபதிகளான தீபனையும் கில்மனையும் உங்கள் மனங்களில் மீண்டும் கொண்டு வரும். இனம் காக்கும் போரில் வீரத்தை வெளிக்காட்டி, விடுதலைக்காக உழைத்து, உயிரை ஈகம் செய்தவர்கள் நினைவுகளை நெஞ்சில் மீண்டும் பரவச் செய்யும்.
ஆயிரம் பாடல்களைப் பாடினாலும் இவர்களின் கீர்த்தி முழுமையாகச் சொல்வதற்குப் போதாது. போர் பரணி பாடத்தக்க பாட்டுடைத் தலைவர்கள் இவர்கள். அறமும் வீரமும் மாறாத கொள்கைத் திறமும் கொண்ட விடுதலைப் புலிகளைப் பாடுதலும் பரவச் செய்வதும் தமிழர்களின் கடமை.
இந்த வரலாற்றுச் கடமையைத் தனது மனங்களிலும் தோள்களிலும் சுமந்து தொடக்கம் முதல் நிறைவு வரை உழைத்தவர் தேசக்காற்று ஆவணக் காப்பகத்தின் பணிப்பாளர் இசைவளுதி. தமிழீழ உணர்வுகளை இதய நரம்புகளில் ஊற்றெடுக்க வைக்கும் இசையை மீட்டுக் குரல்களுக்கு சொந்தக்காரர், தமிழீழ இசை அமைப்பாளர் இசைப்பிரியனின் இசைக்கோலத்தில், தமிழீழத்தின் மூத்த தமிழ் பண்டிதர் சாவை பஞ்சாச்சரம் அவர்களுடன் பாடலாசிரியர்கள் துளசிச்செல்வன், அம்புலி, ஆதிலட்சுமி சிவகுமார் போன்றவர்கள் வரிகளை வடித்துள்ளனர்.
கவிதையையும் இசையையும் உணர்வின் கலவையாக்கிச் செவிகளில் வீரமூட்டும் பாடல்களைத் தங்கள் குரல்களில் தந்தவர்கள் தீ. லோ. மகாராஜன், சந்திரமோகன், ஜெயன், முகேஷ், ராம், பிரசாந்த், வைஷ்ணவி, அம்ருதா, கனிஷா, இவர்கள் உடன் இசைப்பிரியன்.
அறிமுகக் குரல் சேரலாதன் ஆர்வலன். இந்த ஒலிப்பேழை முயற்சி முழுமை பெற முழுமையான ஈடுபாட்டுடன் அக்கறையாக உழைத்த திருமதி தீபன் இலக்கியா அவர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.
இந்த ஒலிப்பேழையில் உள்ளவை வெறுமனே இசைப்பாடல்கள் அல்ல, இவை இந்த தளபதிகளுக்காக தீர்க்கப்படும் மரியாதை வேட்டுகள்.
தாயக விடுதலை என்ற தாரக மந்திரத்துடன் தலைவரின் தடம் தொடர்ந்து இவர்கள் கடைசி மூச்சும் கலந்த தேசத்தின் காற்றாய் உங்கள் வாசல்களில் வீசட்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
அன்புடன் தேசக்காற்று, இது தமிழீழ மக்களின் ஆவணக் காப்பகம்.
