காணால் போனவர்களில் கணிசமானவர்களுக்கு என்ன நடந்து என்று தெரியாமல் அவர்களின் உறவுகள் இன்றும் மண்ணிலே துடித்துக் கொண்டிருக்கின்றார்களென ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் காணாமல் போனவர்களின் உறவினர்களை ஒரு கட்டமைப்பாக உருவாக்கி, முதன்முதலில் காணாமல்போனோர் சங்கத்தினை உருவாக்கியர்வர்கள் ஈபிடிபியினரேயெனவும் கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை, தற்போது, அரசியல் பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்ற சில தரப்புக்கள், இந்த மண்ணிலே காணாமல்போவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மானசீகமாக உழைத்த எம் மீது குற்றசாட்hட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
யாழ் ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில் “செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
மனித எச்சங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அல்லது தொற்று நோய் காரணமாக ஏற்பட்டவையாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் கருத்தானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறான கருத்துக்கள் செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பற்றிய வீரியத்தினை குறைத்து விடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்துகின்றது.
70, 80, 90, ஆம் ஆண்டுகளிலே இந்த மண்ணிலே வாழ்ந்த தலைமுறையினர் இந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தக் காலப் பகுதியில் இந்த மண்ணில் பாரிய இயற்கை பேரிடர்களோ, நூற்றுக்காணக்கான உயிர்களை பலியெடுத்த தொற்று நோக்களோ இடம்பெற்றிருக்கவில்லை. அவ்வப்போது செய்ற்கை பேரிடர்தான் நடைபெற்றிருக்கின்றது.
இவர்கள் கூறுவது போது இயற்கை பேரிடர் மற்றும் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றால், அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றவையாக இருக்க வேண்டும்.அவ்வாறாக எச்சங்கள் மீட்கப்படவில்லையென ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.
