போதனா சிவானந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ![]()
![]()
சதுரங்கப் போட்டியில் இளம் வயதிலேயே பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்று போதனா சிவானந்தன் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.
கூர்மையான சிந்தனை…
ஆழமான கவனம்…
விடாமுயற்சி…
பொறுமையான பயிற்சி…
இவை அனைத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இந்த வரலாற்றுச் சாதனையை பார்க்க முடிகிறது.
இளம் வயதிலேயே சர்வதேச அளவில் இத்தகைய உயரத்தைத் தொட்டிருக்கும் போதனா சிவானந்தனின் சாதனை, தமிழ் மக்களுக்கும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கும் மிகுந்த ஊக்கமளிக்கும் ஒன்றாகும். ![]()
இது உன் வெற்றிப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும். இன்னும் பல சர்வதேச சாதனைகளையும் பட்டங்களையும் வென்று, உன் பெற்றோருக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்! ![]()
சதுரங்க உலகில் நீ இன்னும் பல உயரங்களைத் தொடவும், நீ நினைத்த இலக்குகள் அனைத்தையும் அடையவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
தமிழ் மகளின் சாதனை…
தமிழர்களின் பெருமை!
