ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் பயிற்சி விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த Tupolev Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக அதில் இருந்த ஆறு விமானப் பணியாளர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமூர் பிராந்தியத்தில் உள்ள கிராஸ்னோயரோவோ கிராமத்திற்கு அருகிலுள்ள மக்கள் வசிக்காத பகுதியில் விமானம் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
