அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு பெய்ஜிங் வந்தடைந்தார். அவரை இராணுவ மரியாதையுடன் துணை அதிபர் ஹான் ஜெங் உள்ளிட்ட சீனப் பிரமுகர்களும் வரவேற்றனர்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து டிரம்ப் சிவப்பு கம்பளத்தின் மீது இறங்கியபோது,சீன மாணவர்கள் அமெரிக்க மற்றும் சீனக் கொடிகளை அசைத்து, மாண்டரின் மொழியில் “வரவேற்கிறோம்” என்று கோஷமிட்டனர்.
