திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் வீசிய கடும் காற்றினால் வீடொன்று சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் முள்ளியடி பகுதியில் உள்ள குறித்த வீடு இன்று (22-10-2026) பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் குறித்த வீட்டுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் உள்ள ஒரு பகுதி உடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
