ஈழத்தின் தலைசிறந்த தாளவாத்தியக் கலைஞர்களில் ஒருவரான வரதன் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியை, அவரது மகன் பானு அறியத்தந்து நம் அனைவரையும் ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளார்.
இசை உலகிற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்த அவரது மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது அனுதாபங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.
