நாடளாவிய ரீதியில் காவல்துறையினர் நடத்திய விசேட சோதனையில் 26,606 பேர் சோதிக்கப்பட்டு, 463 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 525 பேரும் அடங்குவர். மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 324 சாரதிகளும், அலட்சியமாக வாகனம் செலுத்திய 119 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
