நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் இலங்கையின் ஏனைய சிறைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர..
Prisons & Corrections
அவ்வகையில் கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
அதன் காரணமாக, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும் நீர்கொழும்பு சிறையிலுள்ள கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அத்தகைய அவசர இடமாற்ற நடவடிக்கையின் அடிப்படையிலேயே, பலத்த பாதுகாப்புடன் 60 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
