நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், கொழும்புக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக பொரளை சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த அதிகாரிகளின் விவரங்கள்: இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளான எஸ். ஏ. எஸ். சந்திரவன்ச, எஸ். டி. எஸ். அபேவன்ச, ஏ. டி. தரங்க, டி. எம். ஆர். திலகசிறி, பி. என். என். தரங்க, டி. டபிள்யூ. புஷ்பகுமார மற்றும் ஆர். பி. ஆர். சஞ்சீவ ஆகியோரின் உடல்களே இவ்வாறு இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளன
