பதுளை, ஹாலிஎல பகுதியில் டயர் விற்பனை நிலையத்தில் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான டயர்களைத் திருடிய முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டு அக்டோபர் 30 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார். இந்தநிலையில் சுமார் 100 சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்து லொறியைக் கண்டுபிடித்த காவல்துறையினர், 66 டயர்களை மீட்டுள்ளதுடன் மேலதிக சந்தேகநபரைத் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
