பூநகரியில் பெரும் சோகம்! ஒரே வீட்டில் தந்தையும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்பு!
கிளிநொச்சி, பூநகரி, மன்னார் வீதி, ஐந்தாம் கட்டை காவாய்க்குளம் பகுதியில் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய அற்புதராசா நிஷாளன் அவர்கள், நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மகனின் பிரிவால் துயரத்தில் இருந்த அவரது தந்தையார் பூபாலு அற்புதராசா அவர்களும், மறுநாளான 20ஆம் திகதி நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஒரே வீட்டில் தந்தையும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த இருவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
