இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்சவை, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதனிடையே மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான தரப்பினர் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் பிணை உத்தரவைப்பிறப்பித்திருந்தார்.
தலா ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிராந்தி ராஜபக்சவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விசேட விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக கடந்த 13ஆம் திகதி, சிராந்தி ராஜபக்சவுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
