யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அதன் போது, மறைந்த ஊடகவியலாளர் ஆ. சபேஸ்வரனின் திருவுருவ படத்திற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளர் தயாபரன், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பிருந்தாபன் பொன்ராசா ஊடகவியலாளர்களான அ.சசி., சி.த.காண்டீபன். உட்பட ஊடகவியலாளர் நிகழ்த்தினர்.
நிகழ்வில் ஊடகவியலாளர் சபேஷ்வரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள், மைக்கல் நேசக்கரம் மற்றும் விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சபேஷ்வரனுக்கு அஞ்சலி செலுத்தினர்
