சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வேறு எங்கும் பார்க்கமுடியாத அரிய உறவு நீடித்து வருவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் திங்கட்கிழமை (ஜூலை 13) தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கு முதல் முறையாக அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரைச் சந்தித்தார்.
பின்னர் பேசிய திரு தர்மன், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், வரப்போகும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் சேவை (ஆர்டிஎஸ்) ஆகியவற்றை இரு நாடுகளின் பொதுவான லட்சியத்திற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
“நமது பொருளியல் வளர்ச்சி அடைவதற்கான இருதரப்பு விருப்பத்தை இவை பிரதிபலிக்கின்றன,” என்றார் அவர்.
“ஆர்டிஎஸ் ரயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்தவுடன் சுற்றுலா, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் சிங்கப்பூரர்களுக்கும் மலேசியர்களுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் மேலும் அதிகரிக்கும்.
“சிங்கப்பூர்-மலேசிய உறவைப் போன்று வேறு எங்கும் காண்பது அரிது. அதற்குரிய சிறப்பு அம்சங்களை இருநாடுகளும் கொண்டுள்ளன. எதிர்காலத்தை நோக்கி ஒன்றாகப் பயணம் செய்வதும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதும் ஒவ்வொரு தலைமுறைத் தலைவர்களாலும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் ஒரு நிலையான முடிவு.
