சிங்கள மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றும் நோக்கில் கீழ் வவுனியாவில் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என அரச கூட்டுறவு துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க என்பவர் தெரிவித்துள்ளார்.
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும், ஏனைய பிரதேச மக்களைக் குடியேற்றும் திட்டமாகவே அது காணப்படுவதாகவும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரச அமைச்சர் தனது விளக்கத்தை வழங்கியுள்ளார்.
47பில்லியன் மதிப்பீட்டில் செயற்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதுடன், தந்திரிமலை பகுதியில் புதிய அபிவிருத்தி மண்டலமொன்றை உருவாக்குதல், மன்னார் மாவட்டத்தின் யோத குளம் மற்றும் அகத்திமுப்பு குளத்தின் கீழ் 30,ஆயிரம் ஏக்கர் நெற்பயிரச்செய்கை நிலங்களின் பயன்பாட்டுச் செறிவை அதிகரித்தல் மற்றும் நீர்மின் உற்பத்தி என்பன் முக்கிய நோக்கங்களாகும்.திட்டத்தின் முதற்கட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டில் ரூபா 5,ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரச அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்திற் கொண்டே இத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றும் நோக்கில் அது முன்னெடுக்கப்படவில்லை என்றும், எனவே அச்ச சந்தேகங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
