மேற்குக் கரையின் ஹெப்ரான் நகருக்கு அருகே இராணுவச் சாவடி மீது பலஸ்தீனர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் படையினர் இருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பதிலடித் தாக்குதலில் இரு பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்து ஹெப்ரான் நகரை முற்றுகையிட்டு, மேற்குக் கரை முழுவதும் முழுமையான ஊரடங்குச் சட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
