நூல் ஆசிரியர் குமாரு யோகேஸ்வரன் அவர்களால் எழுதப்பட்ட “யோகம் வளர்த்த யாகம்” எனும் சமூக முன்னேற்றத்திற்கான சிந்தனை நூல், மிக விரைவில் வெளிவரவுள்ளது.
அதன் ஒரு சிறப்பான தருணமாக, 30.09.2026 இன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மண்டபத்தில், எங்கள் மண்ணின் புகழ்பெற்ற “யாழ் ஆசான்” நிறுவனத்தின் நிறுவனர், மதிப்பிற்குரிய சமாதான நீதவான் திரு. து. நிரூசன் அவர்களால், “யோகம் வளர்த்த யாகம்” நூலின் பிரதியை நூல் ஆசிரியரான என்னிடம் கையளித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நூல் வெளிவருவதற்காக அயராது உழைத்து, பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த யாழ் ஆசான் நிறுவனத்தின் நிறுவனர் திரு. து. நிரூசன் சமாதான நீதவான் அவர்களுக்கு, எங்களின் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, திடீரென என்னை அழைத்து, என் கைகளில் என் நூலைக் கையளித்த அந்தத் தருணம் எனக்கு சொல்ல முடியாத இன்ப அதிர்ச்சியையும், பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. அந்த அன்பையும் ஆதரவையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வன்னி மண்ணின் மூத்த கலைஞரும், வில்லிசை அழகருமான திரு. ஜெயராசசிங்கம் அண்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது எனக்கு எதிர்பாராத, மறக்க முடியாத ஒரு சந்திப்பாக அமைந்தது.
“யோகம் வளர்த்த யாகம்” நூல் மிக விரைவில் உங்கள் கரங்களில் தவழவுள்ளது.
அன்புச் சொந்தங்களே…
எதிர்பாருங்கள்!
இந்த நூல் உருவாகி வெளிவருவதற்காக பல்வேறு வழிகளில் உழைத்த, உறுதுணையாக நின்ற, ஊக்கமளித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இந்த நூலில் என்னோடு நெஞ்சுக்கு நெருக்கமாகப் பயணிக்கும் பல முக்கியமான அன்புள்ளங்கள் தங்களின் அன்பையும் வாழ்த்துகளையும் சிறப்பான வாழ்த்துச் செய்திகளாக பதிவு செய்துள்ளனர். அவர்களின் அன்பும் ஆதரவும் இந்த நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
இவை உள்ளிட்ட அனைத்து சிறப்புகளையும், நூல் வெளியீட்டு விழாவில் மிக விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றோம்.
குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் சிந்தனை வளர்ச்சிக்கும், வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஒரு நூல் என்பது வெறும் எழுத்துக்களின் தொகுப்பு அல்ல;
ஒரு தலைமுறையின் சிந்தனையை மாற்றக்கூடிய விதையாகவும் அது அமையலாம்.
அந்த நம்பிக்கையுடன் “யோகம் வளர்த்த யாகம்” உங்கள் முன் வரவுள்ளது.
இந்தப் பயணத்தில் என்னோடு நின்ற ஒவ்வொரு அன்புள்ளத்திற்கும் மீண்டும் ஒருமுறை என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்,
குமாரு யோகேஸ்வரன்
நூலாசிரியர் – “யோகம் வளர்த்த யாகம்”
Weniger anzeigen
