புகையிரதத்துடன் மோதி 76 வயதான இத்தாலி நாட்டவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரத்துடன் , நீர்கொழும்பு பகுதியில் இத்தாலி நாட்டவர் மோதி பலத்த காயமடைந்திருந்தார்.
காயமடைந்தவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
