இந்தியாவில் மூன்று நபர்களால் டெல்லி பூங்கா ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் அந்நாட்டு தலைநகரில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தக் குற்றச் சம்பவம், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளதுடன், பாலியல் அத்துமீறலை கட்டுப்படுத்துவதில் கடுமையான சட்ட சீர்திருத்தங்கள் தோல்வியடைந்துள்ளன என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
