பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரத்தை மாற்றுவது தொடர்பாகத் தற்போது கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது குறித்துக் கல்வி அமைச்சு எதிர்காலத்தில் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
